சிறுபஞ்சமூலம்
நூல்குறிப்பு
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதிநூல்கள் தோன்றின.
- அவை பதினெண் கீழ்க்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
- அவற்றுள் ஒன்று சிறுபஞ்சமூலம்.
- ஐந்து சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்.
- அவை கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகியன.
- இவ்வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது. அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன.
- இப்பாடல்கள் நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்னும் வகையில் வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன.
- இந்நூலில், கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றேழு வெண்பாக்கள் உள்ளன.
- சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான், மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் எனச் சிறப்புப்பாயிரம் கூறுகிறது..
- காரி என்பது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்தபெயர்.
- மாக்காரியாசான் என்று பாயிரச் செய்யுள் இவரைச் சிறப்பிக்கிறது.
- இவர், சமண சமயத்தைச் சார்ந்தவர்.
- இவரும் கணிமேதாவியாரும் ஒருசாலை மாணாக்கராவர்.
- பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்கருத்துகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
பாடல்
- பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
- மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
- விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
- உரையாமை செல்லும் உணர்வு
- - காரியாசான்
பாடல்
- கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,
- எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல், பண்வனப்புக்
- கேட்டார்நன் றென்றல், கிளர்வேந்தன் தன்னாடு
- வாட்டான்நன் றென்றல் வனப்பு.
- - காரியாசான்
சொற்பொருள்
- மூவாது - முதுமை அடையாமல்
- நாறுவ - முளைப்ப
- தாவா - கெடாதிருத்தல்
- கண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்
- எண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு
- வனப்பு - அழகு
- கிளர்வேந்தன் - புகழுக்கு உரிய அரசன்
- வாட்டான் - வருத்த மாட்டான்
பாடல்
- பொருள்போக மஞ்சாமை பொன்றுங்காற் போர்த்த
- அருள்போகா வாரறமென் றைந்தும் இருள்தீரக்
- கூறப்படும் குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்
- தேறப்படும் குணத்தி னான்
- - காரியாசான்